மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல நடிகர் மீது வழக்கு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிப்பைத் தவிர நடிகர் விஜய் பாபு ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் “பெருச்சாழி“, “ஆடு“, “முத்துக்கவு“, “ஆடு2“, “ஹோம்“, போன்ற பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி தன்னை கடந்த ஒன்றரை மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார் என்று கோழிக்கோடு பகுதியில் வசித்துவரும் இளம் நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி எர்ணாகுளம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் எனக்கு சினிமா துறையில் யாரையும் தெரியாது. விஜய் பாபு மீது தனிப்பட்ட நம்பிக்கை இருந்தது. அவர் எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து எனக்குப் பல முறை ஆலோசனைகளை வழங்கிய அவர் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த மார்ச் 13 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பலமுறை எனக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். உதவி செய்கிறேன் என்கிற பெயரில் மது மற்றும் போதைப்பொருளை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய் பாபு மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 376, 506, 323 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்வதற்காக போலீசார் அவரைத் தேடியபோது தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்மீதான பாலியல் புகார் குறித்து முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஜய் பாபு தான் குற்றமற்றவன் என்று கூறியதோடு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகையின் பெயரையும் வெளிப்படுத்திவிட்டார். இது தவறான செயல் என்று எச்சரித்த போலீசார் அவரைத் தேடிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com