மலையாள திரையுலகில் மரணம் அடைந்த மற்றொரு பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,March 08 2016]

2016ஆம் ஆண்டு மலையாள திரையுலகிற்கு நேரமே சரியில்லை போலும். தொடர்ந்து மலையால திரையுலக பிரபலங்கள் அதுவும் நடுத்தர வயது நட்சத்திரங்கள் மரணம் அடைந்து வருகின்றனர்.

இந்த வருடத்தில் மட்டும் நடிகை கல்பனா, இயக்குனர் ராஜேஷ்பிள்ளை மற்றும் நடிகர் கலாபவண் மணி ஆகியோர் மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே மலையாள திரையுலகினர் இன்னும் மீண்டு வரவில்லை. இந்நிலையில் இயக்குனர் சாஜி பரவூர் (Saji Paravoor)என்பவர் இன்று மரணம் அடைந்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'ஜனகன்' என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் சாஜி பரவூர். சுரேஷ் கோபி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை பழிவாங்குவது போன்றும் அவருக்கு வழக்கறிஞரான மோகன்லால் உதவுவது போன்றும் கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் கேரள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக உடல்நலமின்றி இருந்த இயக்குனர் சாஜி பரவூர் இன்று மரணம் அடைந்துவிட்டதாக அதிர்ச்சி கலந்த தகவல் வெளிவந்துள்ளது.

More News

மதுரை நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் இன்று ஆஜராவாரா?

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் மீது ரவிரத்தினம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில...

கமல்-சூர்யா இழந்த உண்மையான நட்பு

மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் மலையாள திரையுலகை மட்டுமின்றி தமிழ்த்திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் தமிழில் ஒரு ஜோம்பி திரைப்படமா?

'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மிருதன்'...

'கபாலி' படத்தின் டீசர், இசைவெளியீட்டு தேதிகள் குறித்த விபரங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

கலாபவண் மணி கொலையா? அதிர்ச்சி தகவல்

தேசியவிருது பெற்ற பிரபல மலையாள நடிகர் கலாபவண் மணி திடீர் மரணம் அடைந்த செய்தியை நேற்றிரவு ஏற்கனவே பார்த்தோம்.