தந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

மலையாள திரையுலகில் 23 வயதில் இயக்குனராகி தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதின் ஒல்லூர் என்பவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றி உள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய தந்தை சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய கல்லீரலில் பிரச்சனை இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கல்லீரல் தானம் கொடுத்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எனவே நான் கல்லீரல் தானத்திற்காக யாரையும் எதிர்பார்க்காமல் நானே கல்லீரல் தானம் கொடுக்க முன் வந்தேன். இதனையடுத்து கடந்த 18ம் தேதி கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. தற்போது நான் டிஸ்சார்ஜ் ஆகி விட்டேன். எனது தந்தையும் மிக விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் இருவரும் தற்போது நலமாக உள்ளோம். எனது தந்தைக்கு கல்லிரல் தானம் கொடுத்ததை நான் பெருமையாக கருதவில்லை, இது எனது கடமை, அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். இந்த ஆபரேஷனை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஆதின் ஒல்லுர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாகவும் அந்த திரைப்படத்தின் பணிகள் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த படத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தந்தையின் உயிரை காப்பாற்ற 25 வயது இளம் இயக்குனர் ஒருவர் தனது கல்லீரலை தானமாக வழங்கி உள்ளது மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்துக்கொண்ட பிறகு அதிபர் ட்ரம்ப் முற்றிலும் நலமாக இருக்கிறார்!!! வெள்ளைமாளிகை அறிவிப்பு!!!

மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல என்று உலகச் சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது

'அர்ஜூன் ரெட்டி' நடிகை கொடுத்த புகார்: பிரபல ஒளிப்பதிவாளர் கைது

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படம் 'ஆதித்யா வர்மா'என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் ஆனது என்பதும் இந்த படத்தில் துருவ் விக்ரம்

இதற்குமுன் தமிழகத்தை வெட்டுக்கிளிகள் தாக்கியிருக்கிறதா??? வரலாறு என்ன சொல்கிறது???

வெட்டுகிளிகளின் படையெடுப்பால் இந்தியா, பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷ், ஈரான் எனப் பல நாடுகள் கடுமையான அழிவுகளைச் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஒரே நாளில் சென்னையில் 22 பேர் உயிரிழப்பு: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 800க்கும் அதிகமாக உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 500க்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 மண்டலங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேல்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் இருந்து வரும் நிலையில் சென்னையின்