தந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரையுலகில் 23 வயதில் இயக்குனராகி தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதின் ஒல்லூர் என்பவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றி உள்ளதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய தந்தை சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய கல்லீரலில் பிரச்சனை இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கல்லீரல் தானம் கொடுத்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எனவே நான் கல்லீரல் தானத்திற்காக யாரையும் எதிர்பார்க்காமல் நானே கல்லீரல் தானம் கொடுக்க முன் வந்தேன். இதனையடுத்து கடந்த 18ம் தேதி கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. தற்போது நான் டிஸ்சார்ஜ் ஆகி விட்டேன். எனது தந்தையும் மிக விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நாங்கள் இருவரும் தற்போது நலமாக உள்ளோம். எனது தந்தைக்கு கல்லிரல் தானம் கொடுத்ததை நான் பெருமையாக கருதவில்லை, இது எனது கடமை, அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். இந்த ஆபரேஷனை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஆதின் ஒல்லுர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாகவும் அந்த திரைப்படத்தின் பணிகள் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த படத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தந்தையின் உயிரை காப்பாற்ற 25 வயது இளம் இயக்குனர் ஒருவர் தனது கல்லீரலை தானமாக வழங்கி உள்ளது மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com