பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் போலவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது
இந்த நிலையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட நிறுத்தம் செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னை ஈவிபியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அதில் ஆறு போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா என்ற தகவல் பிக்பாஸ் குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை அடுத்து தற்காலிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற வருடம் போலவே அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com