பிரபல நடிகை விவாகரத்து
Saturday, September 3, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
காவ்யா, மஞ்சு, லிசி, அமலாபால் மற்றும் திவ்யா உண்ணி என வரிசையாக மலையாள நடிகைகள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல மலையாள நடிகையான சாந்திகிருஷ்ணாவும் கணவர் பஜோர் சதாசிவன் அவர்களை விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சாந்திகிருஷ்ணா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்ததாகவும் இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சாந்திகிருஷ்ணா ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 1994ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகை விருதையும் வென்றுள்ளார். தமிழில் பன்னீர்புஷ்பங்கள், மணல் கயிறு, நேருக்கு நேர் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். 'நேருக்கு நேர்' படம் விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்த படம் என்பதும், சூர்யாவுக்கு இதுதான் முதல் படம் என்பதும் இந்த படத்தில் சாந்திகிருஷ்ணா, சூர்யாவின் சகோதரியாகவும் ரகுவரனின் மனைவியாகவும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment