'தளபதி 65' படபூஜையில் கலந்து கொண்ட இந்த நடிகை யார்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜை சம்பந்தமான புகைப்படங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இன்று பூஜை நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய பூஜையில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் ’தளபதி 65’படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது.

தளபதி 65 படத்தில் அபர்ணதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பூஜா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் நாயகிக்கு இணையான கேரக்டரில் அபர்ணதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை அபர்ணதாஸ் ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிசான் பிரகாஷன் மற்றும் 2019ஆம் ஆண்டு வெளியான மனோகரம் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் முதல் திரைப்படத்திலேயே விஜய் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெண்களை இழிவுபடுத்தும் திமுக-விற்கு மக்கள் பாடம் கற்றுத்தாருங்கள்...! ராஜ்நாத் சிங் காட்டம்..!

பெண்களை இழிவுபடுத்தி பேசும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, பொதுமக்களாகிய நீங்கள் சரியான பாடத்தை கற்றுத்தரவேண்டும் என்று இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

99 சாங்ஸ் விழாவில் இந்தியில் பேசியது ஏன்? தொகுப்பாளினி விளக்கம்!

சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் தயாரித்து, இசை அமைத்து, கதை எழுதிய '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தூள் கிளப்பும் ஸ்ரேயா சரணின் ஹோலி டான்ஸ்: வைரல் வீடியோ

சமீபத்தில் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது

'சுந்தரி' சீரியல் நடிகையின் கணவர் இந்த இளைஞரா? வைரல் புகைப்படம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் கேப்ரில்லா.

'தளபதி 65' படத்தில் கவின் நடிக்கின்றாரா? 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் விஜய், நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்