பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜித், ஷங்கர் பட நடிகர்!

வரும் மக்களவை தேர்தலில் திரையுலகை சேர்ந்த பலர் போட்டியிடுவது குறித்து வெளியாகும் செய்திகளை பார்த்து வருகிறோம். ஜெயப்ரதா, ஊர்மிளா, கமீலா நாசர் உள்பட பல திரையுலகினர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'தீனா' படத்தில் அஜித் அண்ணனாகவும், ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாகவும் நடித்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல அரசியல் கட்சிகளுக்காக கேரளாவில் பிரச்சாரம் செய்த நடிகர் சுரேஷ் கோபி, கடந்த 2016ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.