கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தில் பிரபல மலையாள நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தின் தொடக்கவிழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சித்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சித்திக். காமெடி, குணசித்திர, வில்லன் என இவர் ஏற்காத வேடங்களே இல்லை எனலாம். இந்நிலையில் த்ரில் மற்றும் நகைச்சுவை படமான 'சபாஷ் நாயுடு' படத்தில் சித்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே காமெடி கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் பிரமானந்தம் நடிக்கவுள்ள நிலையில் மலையாள நடிகர் சித்திக்கும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் தென்னிந்திய நடிகர்கள் இணைந்த படம் என்று சொல்வதில் தவறில்லை.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம், சித்திக் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ராஜீவ் குமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மே 14ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஜூலையில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout