close
Choose your channels

கூஸ்பம்ப்ஸ்.. தனுஷின் 'கேப்டன் மில்லர்' படம் பார்த்த நடிகர் பேட்டி..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த படம் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்த நடிகர் ஒருவர் பேட்டியில் தனக்கு கூஸ்பம்ப்ஸ் அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார், ’உரியடி’ விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. மேலும் இந்த படத்திற்கு படப்பிடிப்பின் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலையாள நடிகர் மூர் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் சில காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அப்போது தனக்கு கூஸ்பம்ப்ஸ் அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஒரு சிறந்த அனுபவமாக சினிமா ரசிகர்களுக்கு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு அருமையான காட்சிகளை படமாக்கிய அருண்மாதேஸ்வர் படத்தில் நானும் இருக்கின்றேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment