பிரபல மலையாள ஹீரோ பாடிய முதல் தமிழ்ப்பாடல்! வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரையுலகின் பிரபல இளம் ஹீரோ ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பாடி உள்ள நிலையில் இது குறித்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிரபல மலையாள ஹீரோ துல்கர் சல்மான் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் கடந்த 2000ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்து வரும் மற்றொரு படம் ’ஹே சினாமிகா’. நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார் என்பது தான் இந்த பாடலுக்கான சிறப்பு. இவர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுதான் என்ற நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Once you become fearless, life becomes limitless! ?? Here's an exclusive glimpse from #Achamillai featuring @dulQuer singing for the very first time in Tamil. Song out on 14th Jan. #HeySinamika #DQ33@aditiraohydari @MsKajalAggarwal pic.twitter.com/NipuytBXfl
— Brindha Gopal (@BrindhaGopal1) January 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments