விக்ரமின் 'ஸ்கெட்ச்'-இல் ரீஎண்ட்ரி ஆகும் அஜித் பட நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

சீயான் விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்கெட்ச்' படத்தை 'வாலு' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு 85% முடிந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பாபுராஜ் என்ற நடிகர் இணைந்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் மட்டுமின்றி கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த அஜித் நடித்த 'ஜனா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர். தற்போது 13 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் 'ஸ்கெட்ச்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாபுராஜின் கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்று இயக்குனர் விஜய்சந்தர் தெரிவித்துள்ளார்.

வடசென்னை பகுதியில் நடைபெறும் வகையில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கின்றார். விக்ரம், தமன்னா, ஸ்ரீபிரியங்கா, ராதாரவி, சூரி, ஸ்ரீமான், ஆர்.கே.சுரேஷ், பாபுராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மனைவி மரணம். திரையுலகினர் அஞ்சலி

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மரணம் அடைந்த நிலையில் இன்று காலை அவருடைய மனைவி பர்வதம்மாள் காலமானார்...

சென்னை தி.நகர் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக உள்ளது...

பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவு: கமல், ரஜினி இரங்கல்

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் தாசரி நாராயணராவ்...

ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்ற தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

திராவிட நாட்டிற்கு 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா' என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்

மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டத்தால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட போகிறதோ தெரியாது.