போதை மருந்து விற்பனை செய்ததாக பிரபல நடிகை கைது

  • IndiaGlitz, [Monday,December 17 2018]

மலையாள தொலைக்காட்சி தொடர் மற்றும் மலையாள திரைப்பட் நடிகையுமான அஸ்வதிபாபு என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் அஸ்வதிபாபு வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசார்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவரது வீட்டில் இருந்து 58 கிராம போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

நடிகை அஸ்வதிபாபுவும் அவரது கார் டிரைவரும் பெங்களூரில் இருந்து போதைப்பொருட்கள் வாங்கி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகை அஸ்வதிபாபுவும் அவரது கார் டிரைவர் பினாய் ஆபிரஹாமும் கைது செய்யப்பட்டனர்.