மலையாள சேனல்களில் செய்தியாகிய விஜய் நிவாரண நிதி

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

கேரளா முழுவதும் சமீபத்தில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடரில் சிக்கியுள்ள அம்மாநில மக்களுக்கு தமிழ் திரையுலகினர் செய்து வரும் உதவிகள் பெரும் ஆறுதலாக உள்ளது. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் வித்தியாசமாக கேரள மக்களுக்கு தனது உதவியை செய்துள்ளார். கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் அனுப்பி, அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜய் ரசிகர்கள் லாரிகளில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று கேரள மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சி சேனல்கள் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களின் இந்த உதவி குறித்து சிறப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள வெள்ளம்: விஜய் ரசிகர்களின் பெருமைக்குரிய பணி

More News

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்த படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம்

சர்கார் இசை வெளியீடு தேதி குறித்த தகவல்

வரும் அக்டோபர் 2ஆம் தேதி 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

அஜித்தின் 'விஸ்வாசம்' மும்பையில் நடக்கும் கதையா?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் இருந்தது. 

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்: ஒரு முன்னோட்டம்

சிபிஐ அதிகாரியாக நயன்தாராவுக்கும், சைக்கோ கொலைகாரனாக அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை.

கேரள வெள்ள நிவாரண நிதியாக லைகா நிறுவனம் தந்த தொகை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து அம்மாநில மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகிறது.