மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்முடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் மம்முட்டி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
தனது யதார்த்த நடிப்பின் மூலம் மலையாள சினிமா மட்டுமல்ல தமிழ், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் நடிகர் மம்முட்டி. இவர் மலையாள சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3 முறை தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, மலையாள சினிமா விருதுகள் என்று வெற்றி மகுடத்தைச் சூடிக்கொண்டு இருப்பவர். அதோடு இந்திய அளவில் அறியப்படுகிற ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார்.
1971 ஆம் ஆண்டு “அனுபவங்கள் பாலிசகள்” எனும் திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக நடித்த இவர் பின்பு “தேவலோகம்” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார். இந்தப் படமும் வெளிவராத நிலையில் இவர் கதாநாயகனாக நடித்த “வில்க்கண்ணுண்டு ஸ்வப்னங்கள்“ எனும் திரைப்படம் வெளியாகியது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் மம்முட்டிக்கு அனைத்துமே ஏறுமுகமாகத்தான் அமைந்தது.
நடிகர் மம்முட்டி ஆரம்பத்தில் “சஜின்“ எனும் பெயருடன்தான் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் பெயர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தப்பின்புதான் மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் வெளியான “அகிம்சா“, “யாவளிகா“, “சோதனம்“, “ஆள்கோட்டதில் தனியே“, “அடியோழுக்குகல்“ போன்ற திரைப்படங்கள் அந்தக் காலத்திலேயே வசூல் சாதனையை பெற்றிருந்தது.
அடுத்து இவர் நடித்த “படயோட்டம்“, “ஈ நாடு” திரைப்படங்கள் இரண்டும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக அமைந்தன. இப்படி தொடர்ந்து பிசியான நடிகராக வலம்வந்த நடிகர் மம்முட்டி கடந்த 1986 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 35 திரைப்படங்களில் நடித்து இருக்கிறாராம். அடுத்து “வடக்கண் வீரகதா“, “மதிலுகல்” போன்ற திரைப்படங்களுக்காக இவர் தேசிய விருதுகளைக் குவித்து இருக்கிறார். அந்த வகையில் 3 தேசிய விருதுகள், பல கேரள விருது, பிலிம்பேர் விருது என்று பல பெருமைக்குச் சொந்தக்காரராக வலம் வருகிறார்.
தமிழில் இவர் “மௌனம் சம்மதம்“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து “மறுமலர்ச்சி“, “கார்மேகம்“, “ஆனந்தம்“, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “தளபதி“, “அழகன்“ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பரவலான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
இந்திய அரசு இவரது கலை திறமையைப் பாராட்டும் விதமாக கடந்த 1998 ஆம் ஆண்டு இவருக்கு “பத்ம ஸ்ரீ” விருது வழங்கி கவுரவித்தது. தேசிய விருதுகள், வெற்றிப்படங்கள், வசூல்சாதனைகள் எனத் தொடர்ந்து சினிமாவை தனது யதார்த்த நடிப்பால் ஆட்டுவித்து வரும் நடிகர் மம்முட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com