close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் எதிரொலி.. மலையாள 'ஜெயிலர்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முதல் நாள் காட்சியின் முன்பதிவுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகும் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி மலையாளத்தில் ‘ஜெயிலர்’ என்ற ஒரு திரைப்படம் வெளியாக இருந்தது. இரண்டு படங்கள் ஒரே நாளில் ஒரே டைட்டிலில் வெளியாவதால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது கேரளாவில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை வெளியிட புக் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மலையாள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துடன் மோத விரும்பாத மலையாள ‘ஜெயிலர்’ படக்குழுவினர் ஒரு வாரம் கழித்து அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனால் கேரளாவில் மலையாள ‘ஜெயிலர்’ திரைப்படம் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்துடன் ரிலீஸ் ஆகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment