'சியான் 62' படத்தில் இணைந்த 100 படங்களுக்கும் மேல் நடித்த மலையாள ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடிக்க இருக்கும் ’சியான் 62’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இதுகுறித்து= அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதில் மலையாளத்தில் 100 படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் ஒருவர் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில், ’சித்தா’ இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’சியான் 62’ . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ சுராஜ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ’டிரைவிங் லைசன்ஸ்’ ’பைனல்ஸ்’ உட்பட நூறு படங்களுக்கு மேல் மலையாளத்தில் நடித்துள்ளார் என்பதும் அதில் பெரும்பாலும் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Great to have this “great Indian kitchen” hero on board .
— Shibu Thameens (@shibuthameens) March 3, 2024
With several best actor awards including National and state best, is for the first time in Tamil along our @chiyaan ‘s #Chiyaan62 and @iam_SJSuryah #SUArunkumar film@gvprakash musical@hr_pictures @riyashibu_ @proyuvraaj… pic.twitter.com/7pnEiQMFny
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments