மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை சர்ச்சை.. சிக்கிய பிரபல தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில் பல நடிகைகள் தற்போது தைரியமாக முன்வந்து தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஹேமா கமிஷன் அறிக்கை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு ஊக்கத்தை அளித்துள்ள நிலையில் மலையாள திரையுலகின் முக்கிய பதவியில் இருப்பவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டிய நிலையில் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் தனக்கு தமிழ் நடிகர் ரியாஸ்கான் செல்போன் வழியாக தொடர்பு கொண்டு ஆசைக்கு இணங்க கூடிய உன்னுடைய தோழிகள் இருந்தால் எனக்கு அறிமுகம் செய்து வை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் பாலியல் சர்ச்சையில் தமிழ் நடிகர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ரியாஸ் கான் தரப்பில் என்ன கூற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.