பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. கணவர், மகள்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

பிரபல மலையாள நடிகை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர். இவர் நோட்புக், நிவேத்யம், மேக தீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'எதுவும் நடக்கும்’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அபர்ணா நாயர் நேற்றிரவு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரது கணவர் சஞ்சித் மற்றும் இரண்டு மகள்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

என்னுடைய 18 ஆண்டு கால காதல்.. தமன்னாவின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை தமன்னா திரையுலகத்திற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் எனது  முதல் காதலான சினிமாவின் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்தநாள் நிச்சயம் வரும்.. அனிதா நினைவு நாளில் உதயநிதியின் உருக்கமான ட்வீட்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு  நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்.. வேற லெவலில் வைரலாக்கும் சூர்யா ரசிகர்கள்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல்  

'கிக்' ரிலீஸ் ஆனதை அடுத்து சந்தானம் அடுத்த படத்தின் பிசினஸ் ஆரம்பம்.. முதல் போனியே முரட்டு போனி..!

சந்தானம் நடித்த 'கிக்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

திருமண நாளில் நல்ல செய்தி சொன்ன விஜய் டிவி புகழ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

விஜய் டிவி புகழ்  தான் காதலித்த பென்சி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது முதல் திருமண நாளை கொண்டாடினார்.