நிவாரண நிதி: தமிழ் நடிகர்களின் தாராளமும், மலையாள நடிகர்களின் கஞ்சத்தனமும்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மழை நிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் கேட்டுக்கொண்ட நிலையில் முதல் ஆளாக சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சமும், கமல்ஹாசன் ரூ.25 ல்ட்சமும், நடிகர் சங்கம் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
ஆனால் கோடிகோடியாய் சம்பாதிக்கும் மலையாள பிரபல நடிகர்கள் நிவாரண நிதி குறித்து வாய்திறக்காமல் இருப்பது அவர்களது கஞ்சத்தனத்தை காட்டுவதாக சமூக வலைத்தள பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கடும் எதிர்ப்புக்கு பின்னர் மோகன்லால், மம்முட்டி தலா ரூ.25 லட்சமும், மலையாள நடிகர் சங்கம் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இருப்பினும் கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட பல நடிகர், நடிகைகள் பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தும் இன்னும் ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments