தமிழை பத்தி தப்பா பேசாதே.. ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த மலையாள நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழைப் பற்றி தப்பா பேசாதே என மலையாள நடிகர் ஒருவர் ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத் திரைப்பட துறையில் பல படங்களில் வெங்கடேஷ் என்ற நடிகர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற படத்தில் அந்தோணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
சமீபத்தில், மலையாள சேனல் ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட வெங்கடேஷ், தமிழைப் பற்றி தவறாக பேசிய போட்டியாளர் ஒருவரை கடுமையாக கண்டித்தார்.
"தமிழுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? தமிழைப் பற்றி பேசாதே! தமிழைப் பற்றி ஏன் தப்பாகப் பேசுகிறாய்?" என்று ஆவேசமாக வெங்கடேஷ் கூறிய நிலையில், அந்த போட்டியாளர், "நான் சும்மாதான் சொன்னேன்" என கூற, வெங்கடேஷ், "சும்மா எப்படி தமிழைப் பற்றி பேசலாம்?" என பதிலடி கொடுத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த மலையாள நடிகருக்கே தமிழ் மீது இவ்வளவு பாசம் இருக்கிறது என்று இதனை பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழைப் பற்றி தப்பா பேசாத பொங்கி எழுந்த மலையாள நடிகர் வெங்கடேஷ் வி.பி.
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) October 19, 2024
இவர் ஜிவி பிரகாஷ் நடித்த "ரிபல்" தமிழ் படத்தில் நடித்தவர் pic.twitter.com/u7iZs3LNhJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com