சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த மலையாள நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ’த்ரிஷ்யம்’ ’சார்லி’ ‘தி ஃபேமிலிமேன்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மராத்தி நடிகை காயடு லோஹர் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout