ரஜினியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த் உள்பட ஒரு சிலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், போலீஸ் ஸ்டேஷன் போன்று போடப்பட்ட செட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகர் விநாயகன் இணைந்து உள்ளதாகவும் அவர் இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விநாயகன் ஏற்கனவே தமிழில் விஷால் நடித்த ’திமிரு’ சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’, கார்த்தி நடித்த ’சிறுத்தை’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார் என்பதும் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.