மகாபாரத கதையில் சமந்தா: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார்!

  • IndiaGlitz, [Thursday,January 21 2021]

மகாபாரத காவியத்தில் உள்ள சகுந்தலை என்ற கதையில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் குணசேகர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

துஷ்யந்தன் என்ற மன்னனை காதலிக்கும் சகுந்தலை விசுவாமித்திர முனிவர் சாபம் காரணமாக கணவனை பிரிகிறார். துஷ்யந்தன் சகுந்தலையை மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் பின் பல துன்பங்களைக் கடந்து கணவருடன் எப்படி இணைகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்த படத்தில் சகுந்தலையாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் இயக்குனர் குணசேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க யாரும் முன்வராத நிலையில் தற்போது சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் துஷ்யந்தன் கேரக்டருக்கும் முன்னணி தெலுங்கு நடிகர்களிடம் குணசேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் தற்போது மலையாள நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது