விஜய்யுடன் டான்ஸ் ஆடும்போது கர்ப்பமாக இருந்தேன்: பிரபல நடிகை பேட்டி
- IndiaGlitz, [Tuesday,May 11 2021]
அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது ’குருவி’ திரைப்படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் டான்ஸ் ஆட தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததால் மிகவும் கவனமாக ஆடியதாகவும் ஒரு சில சிம்பிளான ஸ்டெப்ஸ்கள் மட்டுமே எனக்கு நடன இயக்குனர் கொடுத்ததாகவும் அதனால்தான் ஆப்செட் ஆனதாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் விஜய்யுடன் டான்ஸ் ஆடியது தனக்கு மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
மாளவிகா நடித்த முதல் திரைப்படம் ’உன்னைத்தேடி’ என்பதும் அந்த திரைப்படத்தில் அஜீத்தான் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் தனக்கு நடிப்பு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் டான்ஸ் சரியாக வரவில்லை என்றும் அதனால் அஜித் தன்னை திட்டியதாகவும் ஆனால் அதன் பின்னர் தான் சமாளித்து டான்ஸ் ஆடுயதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேபோல் தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்றும் அவருடன் நடிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் மிக எளிமையாக இருந்தார் என்றும் அந்த பேட்டியில் மாளவிகா குறிப்பிட்டுள்ளார்