மாஸ்டர் நாயகியின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… தாறுமாறான கமெண்ட்ஸ்களோடு வைரல்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார். அதோடு இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது.

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எப்போதும் போல நேர்மறை மற்றும் எதிர்மறை கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில தாறுமாறான கமெண்டுகளும் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மாஸ்டர்“ திரைப்படத்திற்கு பிறகு நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இவர் “அருவா” எனும் திரைப்படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தவிர பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான “யுத்ரா” திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷ்ன் குயினாக களம் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக நடிகை மாளவிகா மார்ஷல் ஆர்ட் போன்ற சில விஷயங்களையும் கற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் போட்டோ ஷுட் நடத்தி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு உள்ள புகைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

 

More News

நன்றி தங்கமே! விக்னேஷ் சிவனின் பிறந்த நாளில் நயன்தாரா!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நயன்தாரா ஆச்சரியமான பரிசளித்ததை அடுத்து 'நன்றி தங்கமே' என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்!

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி

திருநங்கைகள் துவங்கிய “டிரான்ஸ் கிச்சன்“… பொதுமக்கள் அமோக வரவேற்பு!

திருநங்கைகள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக உணவகம் ஒன்றைத்  துவங்கியுள்ளனர்.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்… பெண் மருத்துவர் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

நேற்று பெய்த கனமழையால் புதுக்கோட்டை அருகேயுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் மழைநீர் தேங்கியுள்ளது

மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்!

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்