'இந்த சைஸ் ஜீரோ ஃபிட்னஸ் இதற்குத்தானா? மாளவிகா மோகனன் கொடுத்த மாஸ் தகவல்..!
- IndiaGlitz, [Tuesday,May 02 2023]
நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் திடீரென மெலிந்து சைஸ் ஜீரோ உடம்புக்கு மாறிய நிலையில் ரசிகர்கள் பலரும் மாளவிகாவுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்த மாஸ் தகவலை தற்போது மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதனை அடுத்து அவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, தனுஷ் நடித்த ’மாறன்’ திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்திற்காக அவர் சிலம்பம் கற்றதாகவும் அவருக்கு சிலம்பம் சண்டை இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில வாரங்களில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக சைஸ் ஜீரோவுக்கு மாறினார். இதை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் என்னாச்சு மாளவிகாவுக்கு என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது சைஸ் ஜீரோ ஃபிட்டான வீடியோவை வெளியிட்டு ’தங்கலான்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது என்றும் அதற்காகத்தான் இந்த பிட்னஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து அவரது வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.