close
Choose your channels

ஸ்கூட்டருக்கு டிரைவர் வைத்து கொண்ட மாளவிகா மோகனன்.. வைரல் வீடியோ

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் ஸ்கூட்டருக்கு டிரைவர் வைத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன் அதன்பின் விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் தனுஷ் நடித்த ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனனின் இன்ஸ்டாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அவருக்கு ஸ்கூட்டர் டிரைவராக இருந்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவரது டச்-அப்புக்கு உதவி செய்து வரும் காட்சிகளும் உள்ளன.

இந்த பதிவில் மாளவிகா மோகன் கூறியபோது ’அவுட்டோர் படப்பிடிப்புகளில் சில சமயம் ஒளிப்பதிவாளரே ஸ்கூட்டர் டிரைவராகவும் சிலசமயம் டச் அப் உதவியாளராகவும் இரட்டை பணிகளை செய்து வருகிறார் என காமெடியாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment