வேற லெவலில் காமெடி செய்வார்: விக்ரம் குறித்து நடிகை மாளவிகா மோகனன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் குறித்து ரசிகர் ஒருவர் நடிகை மாளவிகா மோகனனிடம் கேள்வி கேட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர் ’வேற லெவலில் விக்ரம் காமெடி செய்வார்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது விக்ரம் குறித்த கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் அளித்தபோது, ’தங்கலான்’ படத்தின் பயணத்தை நான் திரும்பி பார்க்கும்போது விக்ரம் இல்லாமல் இந்த பயணத்தை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தருணத்திலும் எனக்கு அவர் உதவியாக இருந்தார். சுயநலம் இல்லாதவர், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அக்கறை கொண்டவர். சக ஊழியர்களை, சக நடிகர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்வார். குறிப்பாக நகைச்சுவை உணர்வு குறித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் ’வேற லெவல்’ என்று கூறியுள்ளார்.
மேலும் விக்ரம் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர் குணமாகியவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Now when I look back at the #thangalaan , I cannot possibly imagine going through the arduous journey without Vikram Sir. He has helped literally every step of the way, every single shot almost. He’s selfless, super caring for everyone around him, encouraging as a co-actor & one… https://t.co/3NYppUVYu1
— Malavika Mohanan (@MalavikaM_) May 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments