தங்கலான் புரமோஷனுக்கு சிவப்பு நிற ஆடையில் வரும் மாளவிகா மோகனன்... காரணம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் நடித்தார். ’மாஸ்டர்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். அந்த வரிசையில், இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
"தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்று இருக்கிறது.
அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு அந்த மேக்கப்புடன் நடிப்பது என்பது மிகவும் சிரமம், அதையும் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு சிலம்பம் சுத்தும் காட்சிகள் அதிக ரீ-டேக் போன காரணத்தினால் அவருடைய கையில் வீக்கம் ஏற்பட்டது.
அதையும் பொருட்படுத்தாமல் தனது காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன். மேலும் இந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.
அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், ’தங்கலான்’ படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை ’தங்கலான்’ படத்தில் பார்க்கலாம்.
பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது ’தங்கலான்’ புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments