தங்கலான் புரமோஷனுக்கு  சிவப்பு நிற ஆடையில் வரும் மாளவிகா மோகனன்... காரணம் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 13 2024]

மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான பட்டம் போலெ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் நடித்தார். ’மாஸ்டர்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். அந்த வரிசையில், இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று தங்கலான் திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தங்கலான் திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்று இருக்கிறது.

அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு அந்த மேக்கப்புடன் நடிப்பது என்பது மிகவும் சிரமம், அதையும் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு சிலம்பம் சுத்தும் காட்சிகள் அதிக ரீ-டேக் போன காரணத்தினால் அவருடைய கையில் வீக்கம் ஏற்பட்டது.

அதையும் பொருட்படுத்தாமல் தனது காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன். மேலும் இந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.

அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், ’தங்கலான்’ படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை ’தங்கலான்’ படத்தில் பார்க்கலாம்.

பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது ’தங்கலான்’ புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.

More News

உண்மைய சொல்லனும்னா விஜய் தோற்றம் யாருக்குமே பிடிக்கல- வலைப்பேச்சு அந்தணன்.

கல்பாத்தி அகோரம் சகோதரர்கள் மற்றும் விஜய் எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள்.மற்றபடி மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைக்காமல் படத்தை பார்த்து பிறகு முடிவு செய்யலாம்...

இப்பதான குழந்தை பிறந்துச்சு.. அதற்குள் 2 விசேஷமா? லிப்கிஸ் கொடுத்து அமலாபால் கொண்டாட்டம்..!

நடிகை அமலா பாலுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் இன்று அவர் இரட்டை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வாரத்துடன் முடிவடையும் சீரியல்.. ஆரம்பமாகும் 'ஈரமான ரோஜாவே' நாயகியின் புதிய தொடர்..!

'வானத்தைப்போல' என்ற சீரியல் இந்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக 'ஈரமான ரோஜாவே' சீரியலில் நடித்த நாயகி நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோழி பிரசன்னம்: உங்கள் வாழ்க்கையின் மர்மங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

பிரபல ஜோதிடர் சிவ மகா தேவ், சோழி பிரசன்னம் பற்றிய ஆழமான விளக்கத்தை அளித்துள்ளார்.

படத்தில் சிவாவின் தரமான சம்பவம் மற்றும் சூர்யாவின் மிரட்டல் இருக்கு.

சில பல நொடிகளில் மில்லியன் பார்வையாளர்களை சம்பாதித்தது கங்குவா படத்தின் ட்ரைலர்...