close
Choose your channels

தல அஜித் ஸ்டைலில் பைக் ரேஸில் ஈடுபடும் விஜய் நாயகி

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பைக் ரேஸ் என்றாலே கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு தல அஜித் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பைக்கையும் தல அஜித்தையும் பிரிக்க முடியாது. இந்த நிலையில் தல அஜித் ஸ்டைலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனும் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் நடந்த பைக் ரேஸ் ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் இதுகுறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பைக் ரைடிங் என்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறிய மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியதாக கூறியுள்ளார்.

நிச்சயமாக அவர்கள் அளவிற்கு என்னால் வேகமாக பைக் ஓட்ட முடியாது என்றாலும், என்னுடைய வாழ்நாள் முழுவதும் ரெகுலராக பைக் ஓட்டுவதில் ஈடுபடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், ஆனால் தற்போது இந்த பைக் ஓட்டுவதை நான் மிஸ் செய்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment