கலைநயம் எனக்கும்தான் இருக்கிறது? டால் அடிக்கும் 'தங்கலான்' நடிகையின் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Monday,July 17 2023]
தமிழ், மலையாளம், இந்தி மொழி சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் பதிவிட்டுள்ள கலைநயம் மிக்க புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.
மலையாள சினிமாவில் கடந்த 2013 இல் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமனார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் ‘மாஸ்டர்,‘ தனுஷுடன் ‘மாறன்’ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்துவரும் இவர் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கோலார் தங்க வயல் குறித்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் உள்ளிட்ட பல கடினமான விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது உடல்எடையை வெகுவாக குறைத்திருக்கும் நடிகை மாளவிகா தொடர்ந்து வித்தியாசமான உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கலைநயம் என்பது பொருட்களுக்கு மட்டும்தானா? இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது அவர்களின் வாழ்க்கைக்கோ கலைநயம் என்பது கிடையாதா? விளக்கு அல்லது வீடு மட்டும் கலைப்பொருளாக இருக்க வேண்டும்? நம் வாழ்க்கை இருக்கக்கூடாதா? எனக்கூறி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் படு நேர்த்தியான முறையில் பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் உண்மையில் பார்ப்பதற்கு அழகு பதுமையாக காட்சி தருகிறார். இந்நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.