இந்த அவுட்ஃபிட் ஓகே-வா? நடிகை மாளவிகா மோகனன் புகைப்படத்திற்கு ரசிகர்களின் தாறுமாறான பதில்!
- IndiaGlitz, [Wednesday,May 31 2023]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் தனது புது போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது உடை குறித்து அவுட்ஃபிட் நல்லா இருக்கா? என்று அவர் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பிய நிலையில் நெட்டிசன்கள் அளித்துள்ள பதில் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
2013 இல் மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இதையடுத்து சினிமா வாய்ப்பு அதிகரித்த நிலையில் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘மாறன்’ திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதேபோல பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் நடிகை மாளவிகா மோகனன் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தங்கலான்’ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
நடிப்பைத் தவிர நடிகை மாளவிகா மோகனன் சமூகவலைத் தளங்களிலும் ஆக்டிவாகவே இயங்கி வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் போட்டோஷுட் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
ஆனால் தற்போது மொராக்கோ சென்றுள்ள நடிகை மாளவிகா மோகனன் இந்த அவுட்ஃபிட் நல்லா இருக்கா? எனக் கேள்வி எழுப்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் எனக்கு நெருக்கமான ஒருவர் டிசைன் செய்த ஆடை என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனை எப்போதும் கவர்ச்சி உடையிலேயே பார்த்துவரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஏமாற்றிவிட்டீர்களே? என்கிற ரீதியில் கமெண்ட்களைப் பதிவிட்டு உள்ளனர். மேலும் ஒல்லியான தோற்றத்தில் நீங்கள் நன்றாகவே இல்லை என்பது போன்ற நெகட்டிவ் கமெண்டுகளையும் பதிவிட்டு இருப்பது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.