ஒரே ஒரு டவல் இருந்தால் போதும்.. மாளவிகா மோகனின் வேற லெவல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் அல்லது வேறு வசதிகள் தேவையில்லை என்றும் எளிய உடற்பயிற்சி செய்வதற்கு ஒரே ஒரு டவல் இருந்தால் போதும் என்றும் மாளவிகா மோகன் இன்ஸ்டாகிராமில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் அந்த படத்திற்காக அதிகப்படியான உடற்பயிற்சி செய்து உடம்பை ஸ்லிம் ஆக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் மாளவிகா மோகன் தற்போது ஒரு எளிய உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து அதில் கேப்ஷனாக சில டிப்ஸ்களை கூறியுள்ளார். அதில் ’எளிமையான உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு டவல் அல்லது யோகா பாய் இருந்தால் போதும் என்றும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு சில நிமிடங்களுக்கு இந்த உடற்பயிற்சியை செய்து நமது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘என்னை போல் இவ்வாறு உடற்பயிற்சி செய்வது யார் யாருக்கு பிடிக்கும்? என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.