close
Choose your channels

காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. எந்த ஹீரோ படம்?

Tuesday, October 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பின்னர் விஜய்யின் "மாஸ்டர்," தனுஷின் "மாறன்," விக்ரமின் "தங்கலான்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரபாஸ் நடிக்கும் "தி ராஜா சாப்" என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் அவர், தமிழில் கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" படத்திலும் நடித்து வருகிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

"சர்தார் 2" படத்தின் படப்பிடிப்புக்காக தான் காலை 6:34 மணிக்கு சென்றதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment