மாஸ்டர் நடிகையின் வேற லெவல் ஹாட்… கமெண்ட்ஸ்களோடு புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் படத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடித்த “பேட்ட” படத்திலும் அவர் நடித்து இருந்தார். ஆனால் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி இடத்தைப் பிடித்த நடிகை மாளவிகா மோகனனுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிவரும் “டி43’‘ எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். கூடவே பாலிவுட்டில் ஆக்ஷன், த்ரில்லர் படமான “யுத்ரா” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கி வருகிறார்.  

இப்படி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தற்போது பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் கால்பதித்துவிட்ட நடிகை மாளவிகா மோகனன் இன்ஸடாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் பதிவிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிடிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.