இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா ஓட்டலாமா? டிராபிக் என்ன ஆகும்? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மாளவிகா மோகனன் சைக்கிள் ரிக்சா முன்பு கிளாமர் உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ’இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா ஓட்டினால் டிராபிக் என்ன ஆகும்? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் விஜய்யுடன் ’மாஸ்டர், தனுசுடன் ’மாறன்’ ’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விக்ரமுடன் ’தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார், மேலும் ஒரு ஹிந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அதில் அவ்வப்போது அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் சைக்கிள் ரிக்சா முன் கிளாமர் உடைய அணிந்து தனது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகி உள்ளனர். ’இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா சாலையில் ஓட்டினால் என்ன நடக்கும்? டிராபிக் மோசமாகும்? போன்ற காமெடி கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments