சம்மருக்கு இதுதான் சரியான டிரஸ்.. பீச் பேபியாக மாறிய மாளவிகா மோகனன்..!

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் கடலோர பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் இடத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சம்மருக்கு சரியா சரியான டிரஸ் இதுதான் என்றும் பீச் பேபி ஆக மாறிவிட்டார் என்றும் கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் அதன்பின் தனுஷ் நடித்த ’மாறன்’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சற்றுமுன் மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளதாக பதிவாகி வரும் கமெண்ட்ஸ்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.