தனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் ஒரே படத்தில் பிரபலமான நடிகை!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

தனுஷின் அடுத்த படத்தில் ஒரே படத்தில் பிரபலமான நடிகை நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் பூங்கொடி என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், அதன்பின்னர் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த திரைப்படத்தின் மூலம் அவர் அகில இந்திய அளவில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது என்பதும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

தனுஷின் 43வது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எனக்குரிய Hus இன்னும் கிடைக்கல… 10 கல்யாணம் முடிஞ்சு 11 ஆவது முறையாக மணப்பெண் போட்ட கண்டிஷன்!!!

அமெரிக்காவில் ஒரு பெண் 10 திருமணங்களைச் செய்த பிறகும் சரியான துணை கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு! 

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதும் அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தான் திரை உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே

அனிதாவுக்கு ஆதரவு கொடுத்த கமல்: அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்ததாக தெரிகிறது 

ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்: தமிழக அமைச்சர் பேட்டி 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்றும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார்

திரையரங்குகள் திறப்பது எப்போது? நாளை அறிவிப்பு என அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்