மாஸ்டர் நாயகி மாளவிகாவுக்கு என்ன ஆச்சு? நெட்டிசன்களிடையே பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியான உடன் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகில் மாளவிகா கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மிகச் சிலரில் மாளவிகா மோகனனும் ஒருவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட அவருடைய சமூக வலைதளப் பக்கங்கள் சுறுசுறுப்பாக இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரமாக திடீரென மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கம் பிரச்சனையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாளவிகா மோகன் இன்ஸ்டாகிராம் பக்கம் பிரச்சனையில் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்படும் என்றும் மாளவிகா மோகனன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு என்ன ஆச்சு? என்ற பரபரப்பில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
There is a small Technical issue in @MalavikaM_'s Instagaram Account. Team is working on it, Things will be sorted out Sooner ~ #TeamMalavikaMohanan
— Malavika Mohanan (@MalavikaM_Fans) October 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com