'என்ன ஒரு அழகான உலகம்': மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்க்ள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்தப் பதிவுகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் ஒரு சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ‘என்ன ஒரு அழகான உலகம்’ என்ற கேப்ஷனுடன் மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.