தளபதி 64: விஜய்சேதுபதியுடன் மோதிய மாளவிகா மோகனன்?

  • IndiaGlitz, [Sunday,December 29 2019]

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் கலந்து கொண்டு, அவரவர்களின் பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி வருகின்றனர்.

விஜய் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட லண்டன் சென்றுள்ளது போல் மாளவிகா மோகனும் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் மட்டுமின்றி விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் மோதும் காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் மோதும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பது புதிய தகவலாக கருதப்படுகிறது.

More News

அஜித்தின் 'வலிமை'யில் இணைந்த தனுஷ், கார்த்தி பட நடிகர்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மீராமிதுன் மீது புகார் அளித்தவர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவரும், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்தவருமான ஜோ மைக்கேல் பிரவீன்

கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகையின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்

பிரபல தெலுங்கு மற்றும் இந்தி பட நடிகை ஷ்ரத்தா தாஸ் உச்சகட்ட கவர்ச்சியாக பிகினி போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை சூடேற்றி வருகிறது.

செல்போன் இந்த அளவுக்கு உபயோகமானதா? ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக செல்போனை அனைவரும் கூறி வருகின்றனர்

வரப்போகிறது.. " SBI " ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க புதிய நடைமுறை..!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுக்கப் புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுத்தலை ஒரு முறை கடவு எண் (OTP) கொண்டு செயல்படும்.