நாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்: ஹாத்ராஸ் சம்பவம் குறித்து மாளவிகா மோகனன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக காங்கிரஸ் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் மற்றும் பாலிவுட் திரை உலகினர் ஏற்கனவே பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ’மாஸ்டர்’ படத்தின் நாயகி மாளவிகா மோகனன் இதுகுறித்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘முன்பெல்லாம் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அவசர அவசரமாக தடயம் இல்லாமல் செய்ய தகனம் செய்வார்கள். ஆனால் இப்போது? என்று கேள்விக்குறியுடன் குறிப்பிட்டுள்ள மாளவிகா, நாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்’ என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com