கோவிட் நோயாளிகளுக்காக 'மாஸ்டர்' மாளவிகா செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதில் அதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாளவிகா மோகனன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் மூத்த மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் அவர்களுடன் உரையாடியுள்ளார். மருத்துவர் ஜெயந்தி நடராஜன் அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீன் ஆக இருக்கிறார் என்பதும், 30 வருடங்கள் மருத்துவத்துறையில் அனுபவமுள்ள இவர் கொரோனாவுக்கு எதிரான போரில் கடந்த ஒரு வருடமாக ஏராளமான கோவிட் நோயாளிகளை காப்பாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜெயந்தி நடராஜன் அவர்களுடன் மாளவிகா மோகனன் உரையாடிய இந்த வீடியோவில் கோவிட் குறித்து எழும் பொதுப்படையான சந்தேகங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கல் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், வைட்டமின் உணவுகள் ஆகியவை குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com