மாளவிகா மோகனின் மகளிர் தின கொண்டாட்டம்: யாருடன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் மகளிர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

'மாஸ்டர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மாளவிகா மோகனன் தற்போது ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மாளவிகா மோகனன் மகளிர் தினத்தை கொண்டாடினார். அங்கு அவர் கேக் வெட்டி குழந்தைகளுடன் பிரியாணி சாப்பிட்டு, 'மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களை குழந்தைகளுக்காக பேசி காண்பித்து நாள் முழுவதும் குழந்தைகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் ஆதரவற்ற குழந்தைகளுடன் மகளிர் தினத்தை கொண்டாடிய மாளவிகா மோகனனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.