மாளவிகா மோகனுக்கு கிடைத்த நிம்மதியான ஒரு தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் மிகக்குறுகிய காலத்தில் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்று விட்டார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது சமூக வலைதள பதிவுகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் லைக்ஸ் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னுடைய சகோதரர் லண்டனில் படித்து கொண்டு இருப்பதாகவும் ஊரடங்கு காரணமாக அவர் தனியாக தங்கி இருப்பதாகவும் அவரது அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்றும் சமீபத்தில் வருத்தப்பட்டு ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் தற்போது சர்வதேச விமானங்கள் இயங்கத் தொடங்கியதை அடுத்து தனது சகோதரர் இந்தியாவுக்கு வந்து விட்டதாகவும் இருப்பினும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் அறிவுரையின்படி தனது சகோதரர் ஓட்டல் ஒன்றில் தற்போது 14 நாட்களாக தங்கி தனிமைப்படுத்தி இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரர் நல்லபடியாக தாயம் திரும்பியது தனக்கு மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.