ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் முதல்வராக பினராய் விஜயன் அவர்கள் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் அவரது புதிய அமைச்சரவையில் தற்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சைலஜா அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கொரோனா முதல் அலை ஏற்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலையின்போதும், மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா. அவருடைய அதிரடி நடவடிக்கையால் தான் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென அவர் அமைச்சரையில் இருந்து நீக்கப்பட்டது கேரள மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியான மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில், ‘மிகச்சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்களே? என்ன நடக்குது முதல்வர் அவர்களே? என கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
So one of the best health ministers we’ve ever had @shailajateacher got dropped from the cabinet mid-pandemic?! What exactly happened there @vijayanpinarayi ?
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments