'தங்கலான்' ஆடியோ லான்ச் மேடையில் திடீரென சண்டை போட்ட மாளவிகா - பார்வதி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,August 06 2024]

’தங்கலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த மேடையில் திடீரென நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சிலம்பு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் வரும் சுதந்திர தின விருந்தாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் இருவரும் மேடையில் ஏறி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது தொகுப்பாளினி இந்த படத்தில் சிலம்பம் சண்டை போட்டுள்ள மாளவிகா மோகனை பார்த்து இந்த மேடையில் சிலம்பம் சண்டை போட விரும்பினால் யாருடன் மோதுவீர்கள் என்று கேட்டார்.

அதற்கு மாளவிகா மோகனன் சிறிதும் யோசிக்காமல் ’தங்கலான்’ என்று சொல்ல, விக்ரம் மறுத்துவிட்டார். இதனை அடுத்து விக்ரம் மனைவியாக நடித்த பார்வதி மேடைக்கு வந்து கம்பு சுற்றி மாளவிகா மோகனனுடன் சிலம்பம் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.