'தளபதி 64' நாயகியின் லேட்டஸ் அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் சூப்பர்ஹிட்டாகி வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 64' படத்தின் நாயகி மாளவிகா மேனன் இன்று முதல் படத்தில் டெல்லியில் 'தளபதி 64' படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மேனன் 'தளபதி 64; படத்தின் மூலம் விஜய் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' சென்சார் தகவல்கள் மற்றும் புதிய ரிலீஸ் தேதி!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது

'ஆடை'யை அடுத்து அமலாபால் அடுத்த படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றாலும் அந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்த படம் ஓரளவு திருப்திகரமாக வசூலைப் பெற்ற நிலையில் தற்போது அமலாபால் நடித்த அடுத்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது

பால்வாக்கர் மகளுக்கு நெகிழ்ச்சியான மெசேஜ் அனுப்பிய வின் டீசல்

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படங்களின் சக நடிகர்களாக மட்டுமின்றி நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தவர்கள் வின் டீசல் மற்றும் பால் வாக்கர். கடந்த 2013ஆம் ஆண்டு கார் விபத்து

விஜய்சேதுபதிக்கு எதிரான போராட்டம்: மண்டி நிறுவனம் விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மண்டி என்ற நிறுவனத்தின் செயலி ஒன்றின் விளம்பரத்தின் சமீபத்தில் நடித்திருந்தார்.

'மாரி 2' வில்லனுடன் ஜோடி சேரும் 'பிகில்'நடிகை!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.